கெளதம் மேனன் - தனுஷ் கூட்டணியில் 'என் மேல் பாயும் தோட்டா'

கெளதம் மேனன், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா இணையும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் கடந்த வாரம் ஆரம்பமானது. அந்தக் கூட்டணியைப் பற்றி அப்போதே பலரும் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள். தனுஷின் கால்ஷீட்டை வாங்குவதற்காகத்தான் கௌதம் மேனன் செல்வராகவனுடன் இணைந்தார் என்றும் சொன்னார்கள். அது தற்போது நிஜமாகப் போகிறது.


ஜெயம் ரவியும் லட்சுமி மேனனும் முதல் முறையாக ஒரு படத்தில் ஜோடி சேர்கிறார்கள். படத்துக்கு மிருதன் என்று தலைப்பிட்டுள்ளனர். நாடோடிகள், கோரிப்பாளையம், பட்டத்துயானை உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த எஸ். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் படநிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார்.


இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, பாடல்களை எழுதுகிறார் மதன் கார்க்கி. மிருதன் படத்தின் பாடல் பதிவு நடைபெற்று வருகிறது. மிருதன் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் 30 நாட்கள் நடைபெற்று முடிந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு இம்மாதம் 18 ஆம் தேதி சென்னையில் துவங்கி, தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்று, அக்டோபர் மாத இறுதியில் முழுப் படப்பிடிப்பும் முடிவடைகிறது.

No comments:

Post a Comment

Want to share this song with friends?

Quick Search

Related Songs Lyrics...