‘தர்மதுரை’யில் தமன்னாவின் செல்லக் குரல்!

இயக்குநர் சீனு ராமசாமி ‘இடம் பொருள் ஏவல்’ ரிலீஸுக்கு காத்திருக்க, மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்திருக்கும் படம் ‘தர்மதுரை’. தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ஷிவதா நாயர் ஆகிய ஹீரோயின்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். வைரமுத்து வரிகளுக்கு யுவன் இசையமைக்கும் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் மதுரையில் ஆரம்பித்து தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் தமன்னா ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் நியூஸ் வந்துள்ளது. இதுவரை இரவல் குரலில் நடித்து வந்த தமன்னா, தனக்கு முதன் முதலாக தமிழில் டப்பிங் பேச கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை ஒரு சவாலாக எடுத்து முழு மூச்சில் தமிழில் பேச கற்று வருகிறாராம். அதி விரைவில் இந்த அழகியின் இனிய குரலில் தமிழ் பேசுவதை திரையில் ரசிப்போம் என எதிர்பார்க்கப்படுகிறது. அழகான தமன்னாவின் இனிய குரலில் தேன் தமிழை கேட்க காத்திருப்போம்!

No comments:

Post a Comment

Want to share this song with friends?

Quick Search

Related Songs Lyrics...