சூறாவளி வரலட்சுமி அடுத்ததாக அதிரடி போலீஸ்

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் தற்போது அர்ஜுன் நடிப்பில் நிபுணன் என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் நாயகியாக வரலட்சுமி நடித்து வருகிறார். தாரைத்தப்பட்டையில் வரலட்சுமியின் நடிப்பை பார்த்து வியந்த வைத்தியநாதன் அவருக்கு பல காட்சிகளை எக்ஸ்ட்ராவாக சேர்த்திருக்கிறார். அதோடு, நிபுணன் பட நாயகனான அர்ஜுனும் வரலட்சுமியை பாராட்டியதோடு, அவருக்கு நல்ல அழுத்தமான காட்சிகள் நிறைய கொடுக்கலாம் என்று சொன்னாராம். நிபுணன் படத்திலும் வரலட்சுமியை வித்தியாசமான நடிகையாக பார்க்கலாம். அதோடு, அர்ஜுனும் இதுவரையில்லாத ஒரு மாறுபட்ட கெட்டப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்த வேடத்தை சஸ்பென்சாக வைத்துள்ளார்கள்.


பிரசன்னாவும் இப்படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இயக்குனரின் முதல் இரண்டு படங்களில் நடித்த பிரசன்னா இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நிபுணன் படத்தை பற்றிய வரலட்சுமியின் கருத்து - இந்த படத்தில் 'வந்தனா' என்ற துப்பறியும் பெண்ணாக நடிக்கிறேன். நானும் பிரசன்னாவும் அர்ஜுனின் உதவியாளர்கள். கதையை இயக்குனர் சொல்லும்போதே ஒரு புதிய த்ரில்லர் அனுபவத்தை உணர்ந்தேன். அவர் ஒவ்வொரு காட்சியையும் எடுத்த விதத்தைப் பார்த்து இன்னும் வியந்து போகிறேன்.

No comments:

Post a Comment

Want to share this song with friends?

Quick Search

Related Songs Lyrics...