பிரேமம் ரீமேக் தெலுங்கில் ஸ்ருதிஹாசன்

‘நேரம்’ பட நாயகன் நிவின் பாலி நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான படம் ‘ப்ரேமம்’. இது மலையாள திரையுலகில் புதிய சரித்திரம் படைத்தது. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படத்தில் நிவின் பாலியுடன் சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.


பள்ளி காதல் முதல் கல்லூரி காதல் வரை என வகை வகையான காதலை சொன்ன இப்படம் காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் மலர் டீச்சராக நடித்திருந்த சாய்பல்லவி தற்போது கேரளாவின் கனவு கன்னியாகிவிட்டது தனிக்கதை. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவுகிறது. ரீமேக் செய்ய எதிர்ப்பும் உள்ளது.


இந்நிலையில் இப்படம் தெலுங்கு பேசவுள்ளது. இதில் நிவின் பாலி நடித்த வேடத்தில் நாக சைதன்யா நடிக்கிறார்.  மலர் டீச்சர் வேடத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. முதலில் இந்த வேடத்தில் பரிநீதி சோப்ராவும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

No comments:

Post a Comment

Want to share this song with friends?

Quick Search

Related Songs Lyrics...