கணிதன் படம் 458 தியேட்டரில்

கலைப்புலி’ எஸ்.தாணுவின் ‘வி.கிரியேஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ‘கணிதன்’. அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை டி.என்.சந்தோஷ் இயக்கியிருக்கிறார். அதர்வா நடிப்பில் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ஈட்டி’. இப்படத்தில் ஓட்டப் பந்தய வீர்ராக நடித்திருந்தார் அதர்வா! இந்த படத்தை தொடர்ந்து வருகிற 26-ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘கணிதன்’ படத்தில் நியூஸ் சேனல் ரிப்போர்ட்டராக நடித்துள்ளார் அதர்வா! போலி சர்டிஃபிக்கெட்டுகளை தயாரித்து மோசடி செய்யும் ஒரு குமபலை எதிர்த்து போராடும் ஒரு நேர்மையான பத்திரிகையாளரின் கதையை சொல்லும் படமே ‘கணிதன்’.


‘ஈட்டி’ படத்தில் ஒரு தடகள வீரரின் மேனரிசங்களை அழகாக வெளிப்படுத்தி நடித்திருந்த அதர்வா, ‘கணிதன்’ படத்தில் ஒரு சேனல் ரிப்போர்ட்டரின் கடமைகளை நேர்த்தியாக பிரதிபலித்துள்ளாராம்! இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடித்துள்ளார். வில்லனாக தருண் அரோரா நடித்துள்ளார், இவர்களுடன் கே.பாக்யராஜ், மனோபாலா, கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், சுந்தர் ராமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ‘டிரம்ஸ்’ சிவமணி இசை அமைத்துள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Want to share this song with friends?

Quick Search

Related Songs Lyrics...